அருள்மிகு ஸ்ரீ ருக்மணி, ருக்மாய்) ரகுமாயீ சமேத ஸ்ரீ பாண்டுரங்கன் சுவாமி திருக்கோயில்

 


 


அருள்மிகு ஸ்ரீ (ருக்மணி, ருக்மாயீ) ரகுமாயீ சமேத ஸ்ரீ பாண்டுரங்கன் சுவாமி திருக்கோயில், தென்னங்கூர் (காஞ்சிபுரம் to வந்தவாசி சாலையில், 34k.m.தொலைவு, உத்திரமேரூரிவிருந்து 21k.m. தொலைவு), திருவண்ணாமலை மாவட்டம். - - (ஒரிசா மாநிலத்து ஸ்ரீ பூரி ஜெகநாதர் கோயிலைப் போன்று, 120அடி உயரம் கொண்ட கோபுரமும், அதில் ஒன்பதரை அடி உயரத்தில் தங்க கலசமும், அதன் மேல் சுதர்சன சக்கரமும், காவிக்கொடியும் காண்பதற்கு பிரமிப்படைவதாக உள்ளது. ஞானந்த சுவாமிகளின் சீடர் ஹரிதாஸ் சுவாமிகளால் கட்டப்பட்ட இந்த பிரமாண்டமான ஆலயக் கருவறையில், பாண்டுரங்கன் சுமார் 12 அடி உயரத்தில் (சாளக்கிராமத்தினால் ஆன) அழகாக நின்ற கோலத்தில் அழகுற அருட்காட்சி அளிக்கிறார். வியாழக்கிழமைகளில் பாத தரிசனத்திற்கு மிக எளிமையாக பாண்டுரங்க அலங்காரத்திலும்,வெள்ளிக்கிழமைகளில் வெள்ளிக்கவச அலங்காரத்திலும், சனிக்கிழமை களில் திருப்பதி வெங்கடாசலபதி யைப் போலவும், ஞாயிற்று கிழமைகளில், மதுராபுரியை ஆளும் மன்னனைப்போல ராஜ அலங்காரத்திலும் அழகுற அருட்காட்சி அளிப்பது இத்தலச்சிறப்பு., இந்த ஆலயத்தின் மகா மண்டபத்தில் வீற்றிருக்கும் கோவிந்தராஜப் பெருமாள், சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் கல்யாண உற்சவராக அருட்காட்சி அளிப்பது மற்றொரு சிறப்பு. யந்திர வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தரும் இந்த பாண்டுரங்க ஆலயத்தில், ('மகாமேரு') ஸ்ரீயந்திர வழிபாடு மிகவும் விசேஷமாம். ஓம் நமோ நாராயணாய நமக